தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு; அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவு! - Chidambaram nataraja temple - CHIDAMBARAM NATARAJA TEMPLE

Chennai High Court: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளது.

சென்னை
சென்னை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 4:04 PM IST

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த விஷ்ணு கோயிலில் மே 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிதம்பரம் கோயிலில் பிரதான தெய்வம் நடராஜர் தான் எனவும், அதனால் பிரம்மோற்சவம் நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும் பல ஆண்டுகளாக கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மே மாதம் பிரம்மோற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரம்மோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1983ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு அறங்காவலர்கள் உள்ளனர். அவர்களை வழக்கில் ஏன் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர்களுக்குத் தெரியாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:நடிகர் விக்ரம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்! - COMPLAINT Against ACTOR VIKRAM

ABOUT THE AUTHOR

...view details