தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பல சார் பதிவாளர் அலுவலகங்களில் உரிய ஆவணங்கள் இருந்தும் மறுப்பு தெரிவிக்கின்றனர்” - உயர் நீதிமன்றம் வேதனை! - MHC order for Sub registrar

Madras high court: நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு உரிய ஆவணங்கள் இருந்தும் பத்திரப்பதிவு செய்ய மறுக்கும் சார் பதிவாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 10:07 PM IST

சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம் (credits - etv bharat tamil nadu)

சென்னை:நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “பத்திரப்பதிவு செய்ய மறுத்த ராசிபுரம் சார் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, “நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. தவறான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக சார் பதிவாளர் கருதினால் மட்டுமே பதிவு செய்ய மறுக்க முடியும். ஆனால், பல சார் பதிவாளர் அலுவலகங்களில் உரிய ஆவணங்கள் இருந்தும் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

பட்டா, சிட்டா, அடங்கள் மற்றும் எப்.எம்.பி ஆவணங்கள் சரியாக இல்லாதபோது பதிவு செய்ய மறுக்கலாம். விசாரணை நடத்தி தகுந்த உத்தரவு பிறப்பிக்கலாம். உச்ச நீதிமன்றமும் தகுந்த காரணங்கள் இல்லாமல் பதிவு செய்ய மறுக்க முடியாது. சார் பதிவாளர்களும் சாதாரண காரணங்களுக்காக பதிவு செய்ய மறுக்க முடியாது. அதனால், ராசிபுரம் சார் பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 15 நாட்களுக்குள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

பத்திரப்பதிவுத்துறை ஐஜி, நீதிமன்ற உத்தரவை சார் பதிவாளர்களுக்கு அறிவிக்கும் வகையில், 15 நாட்களுக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் இனிமேல் சாதாரண காரணங்களுக்காக பதிவு செய்ய மறுக்கும் சார் பதிவாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தியது குறித்து ஜூன் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:“எந்த ஒரு குடுத்தல் வாங்கலும் கிடையாது”.. நெல்லை ஜெயக்குமார் விவகாரத்தில் ரூபி மனோகரன் விளக்கம்! - MLA Ruby Manoharan

ABOUT THE AUTHOR

...view details