சென்னை:நடிகர் கார்த்திக் குமார் - பாடகி சுசித்ரா தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில், பாடகி சுசித்ரா, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி பேசியிருந்தார்.
பாடகி சுசித்ராவின் பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தன்னைப் பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தார்.