சென்னை:சேலம் மாமாங்கம் பகுதியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் செயில் ரீபேக்டரி என்ற அரசு நிறுவனம் அப்பகுதியின் சில நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் குத்தகைக்கு எடுத்த நிலத்தில், தொன்மையான ராமர் பாதம் உள்ள கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு செல்ல பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அந்நிறுவனம் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்பகுதியின் சில குழுக்கள் செயில் நிறுவனத்துடன் பிரச்சனைகள் செய்து வந்தாகவும், இதனால் அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏறபட்டது.
இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள், செயில் நிறுவனம் தரப்பும் இடையே அமைதி பேச்சுவார்த்தையை அப்பகுதி தாசில்தார் முன்னிலையில் கடந்த மே மாதம் நடத்தினார். அதில், நிறுவனத்தின் முன் பக்க வாயிலை அகற்ற வேண்டும் அல்லது பக்தர்கள், பொதுமக்கள் ராமர் கோயிலுக்கு எந்த வித தடையும் இல்லாமல் செல்வதற்கு தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என செயில் நிறுவனத்திற்கு தாசில்தார் அறிவுறுத்தல்களை வழங்கி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.