தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; விடுதலையான முருகன் ஐடி கார்டு கேட்டு மனு.. திடீரென விலகிய நீதிபதி! - Madras High Court - MADRAS HIGH COURT

Rajiv Gandhi murder case: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரிய வழக்கில் இருந்து திடீரென விலகுவதாக நீதிபதி தெரிவித்தார்.

Madras High Court
Madras High Court

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 2:51 PM IST

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சி முகாமில் உள்ள முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்கப் போவதாகவும், அவ்வாறு விண்ணப்பிக்க வேண்டுமானால், அதற்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

எனவே, தனக்கு உரிய அடையாள அட்டை வழங்கும்படி, கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தும், அதன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, முருகனின் வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வாடிக்கையாளரைப் போல் நைசாக பேசி.. சைசாக செல்போனை திருடிச் சென்ற நபர்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details