சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த 97 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வேலு என்பவருக்கு, 2021ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு, தனக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், 1987-ல் அவர் விண்ணப்பித்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற போதும், 2008ஆம் ஆண்டு அளித்த ஒரு விண்ணப்பத்தை கருத்தில் கொண்டு, 2008 முதல் 2021 வரைக்கான ஓய்வூதிய பாக்கியை வழங்கும்படி தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.