சென்னை:சென்னை செனடாஃப் ரோடு (cenotaph) இரண்டாவது வீதியில் தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில், பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள தனது பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி, நடிகை த்ரிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி டீக்காரமன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை த்ரிஷா மற்றும் அவரது எதிர் தரப்பான மெய்யப்பன் சார்பிலும் பிரச்னை சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.