சென்னை:தமிழகத்தில் உள்ள பிரதான பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் எனவும், பணி மற்றும் கல்வி நிமித்தமாக நள்ளிரவு நேரங்களில் பேருந்து, ரயில் நிலையம் வரும் பெண்களுக்கு தங்குவதற்கு பாதுகாப்புடன் கூடிய விடுதிகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கூட்டாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷஃபீக் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ப்ளீடர் எட்வின் பிராபகர் ஆஜராகி, பெண்கள் பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.