தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை செப்.9-க்கு ஒத்திவைப்பு! - Minister Ponmudi Cases - MINISTER PONMUDI CASES

Ponmudi Suo Moto Case: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

பொன்முடி
பொன்முடி (Credits - Ponmudy 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 5:22 PM IST

சென்னை: கடந்த 1996 - 2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் அரசு சார்பில் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஆகஸ்ட் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details