சென்னை:கடந்த 1996 - 2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் பொன்முடி 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து பின்னர் வேலூருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.