சென்னை:பண்ருட்டி அருகே சவ ஊர்வலத்தின் போது, சாலையில் வீசப்பட்ட பூ மாலை வாகனத்தில் சிக்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உரிய விதிகளை வகுக்காததே இது போன்ற சம்பவத்திற்கு காரணம், அதனால் உரிய வழிகாட்டு விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, பண்ருட்டியைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கபுர்வாலாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், அன்புச்செல்வனின் கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, “சவ ஊர்வலங்களை எடுத்துச் செல்ல அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமை வழங்கியது.
ஆனால், இறுதி மரியாதை ஊர்வலத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது எனவும், சவ ஊர்வலங்களை இனி சாலையில் எடுத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு விதிமுறைகளை வகுப்பது குறித்தும்” தமிழ்நாடு காவல்துறை வழிகாட்டு விதிகளை வகுக்க உத்தரவிட்டிருந்தது. தலைமை நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், காவல்துறை இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், "சடலங்களை எடுத்துச் செல்லும் வழித்தடங்களை கண்கானிக்கவும், போக்குவரத்து மாற்றம் செய்யவும் ஏதுவாக, உயரிழந்தவரின் குடும்பத்தினர் முன்னரே காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். சவ ஊர்வலங்களின் போது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க ஏதுவாக நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை சாலையில் கிடக்கும் மாலைகளை அப்புறப்படுத்த காவல்துறை அழைக்க வேண்டும்.