சென்னை:தமிழக அரசில், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு, வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக, மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி மீது சென்னையைச் சேர்ந்த முகமது மொஹிதின் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய நல்ல தம்பி, ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணையின் போது, முதலில் 1 லட்சம் ரூபாய் தருவதாகவும், இரண்டு மாதங்களில் மொத்த பணத்தையும் மொஹிதினிடம் திரும்ப அளிப்பதாக விஜய நல்லதம்பி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.