மதுரை:மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், பாஜகவின் பல தலைவர்கள் அன்றாடம் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றன. தமிழகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் மோடி நேற்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தனது தியானத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். அவரை தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மோகன் யாதவிக்குப் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த அவர் வெளியே வந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென் இந்தியாவில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன். இப்போது சிதம்பரம், ராமேஸ்வரம், திருப்பதி பாலாஜி கோவில்களில் தரிசனம் செய்து முடித்துள்ளேன்" எனக் கூறினார்.