சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்தல் , புதுப்பித்தல், பாடப் புத்தகங்கள் வழங்கியும், அஞ்சலக வங்கிக் கணக்கு எண் துவங்குதல் போன்ற பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இதுவரை 770 இடங்களில் ஆதார் புதுப்பிப்பு பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ரத்தாகுமா?அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறுகையில்,”ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட முறை மத்திய அரசிடம் நீட் விலக்கு குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருக்கும் பாஜக-விற்கு தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு இருந்துவருவது தெரியும் ஆனால் எதும் பேசவில்லை. இப்போது புதிய அரசு உருவாகியுள்ளது அதும் பல்வேறு மாநிலக் கட்சிகளும் இந்த அரசிலே இனைந்திருக்கின்றனர். இதனால் அந்தந்த மாநிலங்களிலும் இந்த எதிர்ப்புணர்வு இருந்து வரும் நிலையில், நிச்சயம் நீட் தேர்வு குறித்து பேச்சு ஆரம்பிக்கும், இதனால் வரும் நிதியாண்டில் ஒவ்வொரு மாநில அரசும் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது”எனக் கூறினார்.
எய்ம்ஸ் குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை:இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் நிதியால் கட்டப்படுவது போல் தமிழகத்திலும் மத்திய அரசின் நிதியில் கட்ட வேண்டும். ஏனெனில் மதுரை எய்ம்ஸ் முழுமையாக ஜப்பான் நிதி நிறுவனத்தின் கடனிலேயே கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசுடன் ஜப்பான் நிதி நிறுவனம் இணைந்தும் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதில் தாமதம் காட்டாமல் விரைவாக பணிகளைத் தொடங்க வேண்டும். தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் கட்ட வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பில் நில ஒப்படைப்பு, சுற்றுச்சூழல் அனுமதியும் ஏற்கனவே தரப்பட்டதால் தாமதிக்காமல், ஜப்பான் நிதி நிறுவனத்திடம் இருந்து நிதி கேட்டு காலம் கடத்தாமல் ஒன்றிய அரசே நிதி தந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக் கட்டித்தந்தால் நன்றாக இருக்கும். என மத்திய அரசிடம் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை மருத்துவத்துறை சார்பாக அமைச்சர் மா. சுப்ரமணியன் வைத்திருக்கிறார்.
செவிலியர்கள் மருத்துவர்கள் பணி நியமனம்: இப்போது 2500 கிராம சுகாதார செவிலியர்கள் பணி நியமன பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்னால் எம்.ஆர்.பி யில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1021 மருத்துவர்களுக்குப் பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில், அதிலிருந்து 193 மருத்துவர்களின் பணி நியமனம் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது.ஏன்னெறால் கலந்தாய்வில் விரும்பட்ட ஊர்களுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டும் மூன்று மாதங்கள் முடிந்தும் இன்னும் பணிக்கு செல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனால் எம்.ஆர்.பி பணி மூப்பின் அடிப்படையில் பயிற்சி பெற்றவர்களிலிருந்து 10 நாட்கள் கலந்தாய்வு நடத்திப் பணி ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வரும் ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் 2553 புதிய மருத்துவ காலி பணியிடங்களுக்கு நிரப்பிட உள்ளது. ஏற்கனவே கடந்த 10 நாட்களாக நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 983 மருந்தாளுநர்களுக்கு பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளது.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜி மனுக்கள் மீது ஜூன் 14-ல் தீர்ப்பு.. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!