தமிழ்நாடு

tamil nadu

காலையிலேயே வந்த நல்ல செய்தி..கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு! - எவ்வளவு தெரியுமா? - Commercial cylinder price

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 9:47 AM IST

Updated : Jul 1, 2024, 11:59 AM IST

Today LPG Gas Cylinder price: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.31 குறைக்கப்பட்டு ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் கோப்புபடம்
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் கோப்புபடம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து உள்ளன.

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்து ரூ.1809.50-க்கு (கடந்த மாதம் 1840.50) விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில், இம்மாதம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பு வணிகர்கள், உணவக உரிமையாளர்கள் ஆகியோர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜியோ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. அடுத்த மாதம் முதல் உயர்கிறது ரீசார்ஜ் கட்டணங்கள்! - Jio Recharge packs hike

Last Updated : Jul 1, 2024, 11:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details