சென்னை:சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு உபயோக பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால், கேஸ் விலை குறித்த அறிவிப்பைப் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் எதிர்பார்த்து காத்துதிருப்பர். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியானது, இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக, கேஸ் விலையில் எந்த மாற்றமும் இருக்காது எனக் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 19 ரூபாய் குறைக்கப்பட்டு 1911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என பொதுத்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் 1960.50 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர், 30.50 ரூபாய் ஆகக் குறைந்து ரூ.1930 என விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் டெல்லியில் 1745.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1859 ரூபாயாகவும், மும்பையில் 1698.50 ரூபாயாகவும் வணிக சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 818 ரூபாயாக விற்பனையாகிறது.
இதையும் படிங்க:குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் உயிரிழப்பு.. அமைச்சர் முத்துசாமி நேரில் சந்தித்து ஆறுதல்!