சென்னை: சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையின் இரு புறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், லூப் சாலையில் கட்டப்பட்டுள்ள மீன் சந்தையில் உள்ள 360 கடைகளில், 357 கடைகள் ஒதுக்கீடு திங்கள் கிழமை முதல் துவங்கப்படும் எனவும், பயனாளிகளின் பட்டியலும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.