திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அந்த வகையில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா ஆகிய நான்கு பேரும், இன்று மாலை 5 மணி அளவில் நெல்லையப்பர் கோயில் ரத வீதிகளில் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
நெல்லையப்பர் கோயில் ரத வீதிகளில் ஒரே நேரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Lok Sabha Election Campaign Complete: திருநெல்வேலியில் ஒரே நேரத்தில் நான்கு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் நெல்லையப்பர் கோயில் ரத வீதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
![நெல்லையப்பர் கோயில் ரத வீதிகளில் ஒரே நேரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024 Lok Sabha Election Campaign Complete](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-04-2024/1200-675-21249141-thumbnail-16x9-tvl.jpg)
Lok Sabha Election Campaign Complete
Published : Apr 17, 2024, 8:52 PM IST
ஒரே நேரத்தில் நான்கு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே இடத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்ததால், அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையும் படிங்க:ஐசியுவில் மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை! - Lok Sabha Election 2024