சென்னை:சென்னையில் இன்று காலை முதல் கனமழை கொட்டித்தீர்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதேபோல் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் மழைநீர் முழுவதுமாக சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அவ்வீட்டில் உள்ள சிறுமி இவைப் புரியாமல் வீடுகளில் புகுந்த மழைநீரில் மகிழ்ச்சியாக குளித்து விளையாடினார். இதனை அவ்வீட்டில் வயதான சூழலில் கட்டில் படுத்துக்கிடக்கும் மூதாட்டி பார்த்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மழை வெள்ளத்தில் விளையாடிய சிறுமி (Credit - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:மழை வெள்ளத்தில் சிக்கிய பைக், கார்களை பாதுகாப்பது எப்படி? - மெக்கானிக் தரும் டிப்ஸ்!
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை :சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை இரண்டு தினங்களுக்குக் கனமழை முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது மேலும் சென்னைக்கு நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதலே சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னையின் பல்வேறு பகுதிகளான பட்டாளம், புளியந்தோப்பு, வியாசர்பாடி, திருவெற்றியூர், எண்ணூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
சாலைகள் மட்டும் அல்லாமல் எண்ணூர் திலகர் நகரில் உள்ள வீடு ஒன்றில் மழை நீர் முழுவதுமாக புகுந்து மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வீடு முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடையும் நிலை உள்ளது. மேலும் வீட்டில் உணவு சமைக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் தேங்கியுள்ள இடங்களை உடனடியாக நீரை வெளியேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் பிராதான கோரிக்கையாக உள்ளது.