தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறு; பெற்ற மகனை கொன்ற தாய்க்கு வாழ்நாள் சிறை தண்டனை! - MOTHER KILLED HER SON

மதுரையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருப்பதாக பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தாய்க்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை  மாவட்ட முதன்மை நீதிமன்றம்
மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 3:11 PM IST

மதுரை:திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருப்பதாக பெற்ற மகனையே கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் மீதான வழக்கில், 4 ஆண்டுகளுக்கு பிறகு சிறுவனின் தாய்க்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வி.சத்திரப்பட்டி போலீசாரின் விசாரணையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தஜோதி (30). இவரது கணவர் கொத்தனராக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஆனந்தஜோதியும் அதே பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (24) என்ற இளைஞரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்து, அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற ஆனந்தஜோதி (ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், ஆனந்தஜோதியும் மருதுபாண்டியும் வீட்டில் தனிமையில் இருந்ததை ஆனந்தஜோதியின் 4 வயது மகன் பார்த்துள்ளார். தனிமையில் இருந்ததை மகன் பார்த்துவிட்டதால், இது குறித்து தனது கணவரிடம் மகன் கூறிவிடுவார் என அச்சமடைந்த ஆனந்தஜோதி, பெற்ற மகனையே கொலை செய்துள்ளார். தொடர்ந்து விஷபூச்சி கடித்து மயங்கி விழுந்ததாக நாடகமாடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சந்தேக மரணம்:

சிறுவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதேபோல், தனது மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் தந்தையும் வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வி.சத்திரப்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க:நகை வியாபாரியை கடத்தி 2 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த கும்பல்! சென்னை டு மதுரை.. தேடி பிடித்த தனிப்படை!

இதில், சிறுவனின் தாய் ஆனந்தஜோதி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், திருமணத்தை மீறிய உறவால் பெற்ற மகனை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுவனின் தாய் ஆனந்தஜோதி மற்றும் மருதுபாண்டி ஆகியோரை கடந்த 2020-ல் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு மதுரை 5ஆவது கூடுதல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது.

வாழ்நாள் சிறைதண்டனை:

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 4) புதன்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் வக்கீல் ராஜேந்திரன் ஆஜராகியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோசப் சாய், குற்றம் நிரூபணமானதால், சிறுவனின் தாய் ஆனந்தஜோதிக்கு வாழ்நாள் சிறைதண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மருதுபாண்டியை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details