தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படிக்காதவன் பட அம்பிகா பாணியில் நூதனமாக செயல்பட்ட பெண்கள்.. திருப்பூர் பேருந்து நிலையத்தில் நடந்தது என்ன? - ladies pretended as pregnant woman - LADIES PRETENDED AS PREGNANT WOMAN

Tiruppur: திருப்பூர் பேருந்து நிலையத்தில் வயிற்றில் துணியைச் சுற்றிக் கொண்டு கர்ப்பிணி போல நடித்து, மக்களை ஏமாற்றி பணப் பறிப்பில் ஈடுபட்டதாக பொதுமக்களிடம் பெண்கள் சிக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்ப்பிணி போல் ஏமாற்ற முன்ற பெண்கள் புகைப்படம்
கர்ப்பிணி போல் ஏமாற்ற முன்ற பெண்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 9:40 PM IST

Updated : May 8, 2024, 11:04 PM IST

ருப்பூர் பேருந்து நிலையத்தில் வயிற்றில் துணியைச் சுற்றிக் கொண்டு கர்ப்பிணி போல நடித்த பெண்கள் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்:திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களிடம் பணத்தை பெறுவதற்காக பல விதமான மோசடி வேலைகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளன. குறிப்பாக, பொதுமக்களிடம் பணம் பெற கர்ப்பிணி போல வயிற்றில் துணி சுற்றிக் கொண்டு பிச்சை எடுப்பது போலவும், பணம் தொலைந்து விட்டது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என ஆளுக்கு தகுந்தார் போல கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள செயல்படாத எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) அருகே பெண்கள் இருவர் தங்களது வயிற்றில் துணியைச் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட சிலர், அங்கிருந்த பெண் ஒருவர் உதவியுடன் அவர்களின் வயிற்றில் கட்டியிருந்த துணியை அகற்றி அவர்களை எச்சரித்துள்ளனர்.

இச்சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், இதேபோல் திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பல்வேறு விதமாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இது போன்று ஏமாற்றி பணம் பறிக்கும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் இது போன்ற பணம் பறிக்கும் கும்பல்களிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'ஜாம்பஜார் நிஷா'.. பைக் ரைடில் கஞ்சா விற்பனை.. தட்டி தூக்கிய போலீஸ்!

Last Updated : May 8, 2024, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details