தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயந்திர கோளாறு: குவைத் - சென்னை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து!

குவைத்திலிருந்து 154 பயணிகளுடன் சென்னைக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் குவைத்தில் தரையிரங்கப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2024, 3:00 PM IST

சென்னை: குவைத்திலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று (டிசம்பர் 2) திங்கட்கிழமை, இரவு 11.26 மணிக்கு 154 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் என மொத்தம் 162 பேருடன் சென்னைக்கு புறப்பட்டுள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, விமானத்தை உடனடியாக தரையிருக்க முடிவு செய்து, அருகில் இருந்த குவைத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். குவைத் விமான நிலைய அதிகாரிகள் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் குவைத் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியுள்ளது.

இதையும் படிங்க:புயலுக்கு நடுவே சிக்கிய விமானம்.. வைரலான வீடியோ - இண்டிகோ ஏர்லைன்ஸ் விளக்கம்!

பின்னர், விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால், உடனடியாக தொழில்நுட்பக் கோளாறு சரி செய்ய முடிய முடியவில்லை. இதையடுத்து, குவைத்தில் இருந்து சென்னை வரும் அந்த விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு குவைத் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விமானத்தில் இயந்திரக் கோளாறு சீர் செய்யப்பட்டு தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து துரித நடவடிக்கை மேற்கொண்டதால், விமானம் பெரும் ஆபத்திலிருந்து தப்பியதோடு விமானத்தில் இருந்த பயணிகள் உட்பட 162 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details