தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணம் - சீர்காழி நான்கு வழிச்சாலையால் என்ன பயன்? எப்போது பணி தொடங்கும்? - four lane highway road delay - FOUR LANE HIGHWAY ROAD DELAY

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக சீர்காழி வரை 52 கிலோமீட்டர் தூரம் புதிய நான்கு வழிச்சாலையை விரைவில் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 8 வாரங்களில் பதிலளிக்க கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் தொடர்பான கோப்புப்படம், மற்றும் கூகுள் வரைபடம்
நீதிமன்றம் தொடர்பான கோப்புப்படம், மற்றும் கூகுள் லொகேஷன் வரைபடம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 9:45 PM IST

மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வரை ரூ.752 கோடி மதிப்பீட்டில் 136பி என்ற 100 அடி அகலம் கொண்ட புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து. இதற்கான திட்ட அறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது.

இந்த சாலை 52 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைய உள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் இருந்தது. மேலும், இந்த மார்க்கத்தில் உள்ள கஞ்சனூர், சூரியனார்கோவில், வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு ஆகிய நவக்கிரக தலங்கள் மற்றும் திருமணஞ்சேரி, சட்டநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக தலங்களுக்குச் செல்லும் மக்கள் விரைவாக சென்று வருவதற்கும் உதவியாக இருக்கும் நோக்கில் கட்டப்பட உள்ளது.

எஸ்.வாஞ்சிநாதன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:“நான் கேட்ட பாட்ட போடு”.. மறுத்த நபர் கொலை.. 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்!

இந்நிலையில், இதற்கான பணிகள் 5 ஆண்டுகளைக் கடந்தும் தொடங்கப்படாமலேயே உள்ளது. இதுகுறித்து, மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அந்த சாலை அமைப்பதில் தாமதமாவதை எதிர்த்து புகார் அளித்தவருமான எஸ்.வாஞ்சிநாதன் கூறுகையில், “புதிய நெடுஞ்சாலையை விரைவில் அமைக்க மத்திய அரசுக்கும், நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த சாலை அமைய சட்டப் போராட்டம் நடத்தி கண்டிப்பாக வெற்றி பெறுவேன்” என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details