தஞ்சாவூர்:இந்தியாவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை மறு சீரமைக்க அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 41 ஆயிரம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டத்தினை பிரதமர் மோடி இன்று (பிப்.26) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்டமாக 554 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மோடி இன்று (பிப்.26) அடிக்கல் நாட்டிய 554 ரெயில் நிலையங்களில் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்கள் நவீனமாக மேம்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் கும்பகோணம் ரயில் நிலைய புனரமைப்பு பணிகளுக்காக கல்வெட்டினை தென்னக ரயில்வே திருச்சி கோட்ட அலுவலர்களுடன் இணைந்து பாஜகவினர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நடனமாடினர்.