தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

500 பேருக்கு அன்னதானம்; 50 நபருக்கு 'கோட்' பட டிக்கெட்.. குடந்தை விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்! - goat movie celebration - GOAT MOVIE CELEBRATION

goat movie celebration: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடிகர் விஜயின் 'கோட்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் 50 பேருக்கு படத்திற்கான இலவச டிக்கெட் வழங்கப்பட்டது.

கும்பகோணம் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
கும்பகோணம் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் (Credit - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 9:48 AM IST

தஞ்சாவூர்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மோகன், சிநேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலக முழுவதும் வெளியாகியுள்ளது. சிறப்புக் காட்சிகளை பார்த்து ரசித்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் விஜய், அரசியல் கட்சித் தொடங்கிய பிறகு வெளியான முதல் திரைப்படம் என்பதால் படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், விஜயின் கோட் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி, கும்பகோணம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், அப்பளம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கும்பகோணம் கார்த்திக் சினிமாஸ் தியேட்டரில் சிறப்புக் காட்சிக்கு 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கோட் படத்திற்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது.

முன்னதாக, கோட் பட கொண்டாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் கொடி மற்றும் சின்னத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம், கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என பல்வேறு வேண்டுகோளை ரசிகர்களுக்கு விஜய் கூறியிருந்த நிலையில், அமைதியான முறையில் அன்னதானம் வழங்கி ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: தியேட்டரிலேயே கோட் பட டிக்கெட் ரூ.2 ஆயிரமா?.. கேரளா விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details