தஞ்சாவூர்: தஞ்சையில் லாரி உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டருக்கு கும்பகோணம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (41). லாரி உரிமையாளரான இவர் லாரிகள் மூலம் செங்கல், மணல் ஏற்றி சென்று விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (68). இவர் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், ரமேஷ் பாபு கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி இரவு முதல் 16ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை வெண்ணாற்றங்கரையிலிருந்து லாரியில் மணல் ஏற்றி வந்துள்ளார். இந்த லாரியை அப்போதைய மெலட்டூர் சப் இன்ஸ்பெக்டர் சுகுமார் பறிமுதல் செய்ததுடன் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் பாபுவை கைது செய்தார்.
இந்த வழக்கில் லாரியில் இருந்த 4 சுமை தூக்கும் தொழிலாளர்களை குற்றவாளிகளாக சேர்க்காமல் இருப்பதற்காக ரமேஷ் பாபுவிடம் சுகுமார் ரூ.8,000 லஞ்சம் கேட்டுள்ளார். அந்த பணத்தை மெலட்டூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.