கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி மாணவிகள், போலி என்சிசி முகாமில், பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் இருந்து "போலி என்சிசி முகாமில் 13 சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்கள்" என்ற தலைப்பில் வெளியான செய்தியை தொடர்ந்து, இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.