தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டை உலுக்கிய கிருஷ்ணகிரி சம்பவம்.. ஆட்சியர் பெற்றோருடன் நாளை ஆலோசனை! - krishnagiri students Sexual abuse - KRISHNAGIRI STUDENTS SEXUAL ABUSE

Krishnagiri student sexual case: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், மாணவர்களின் பெற்றோருடன் ஆட்சியர் நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, பாலியல் வன்கொடுமை தொடர்பான கோப்புப் படம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 7:53 PM IST

சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகளுக்கு, அந்தப் பள்ளியில் என்சிசி முகாம் நடத்திய சிவராமன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. அதன் மீது 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 மாணவிகள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 5 மாணவிகள் புகார் அளித்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மாணவிகளின் பெற்றோருடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஆட்சியர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனியார் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கைதாகி உள்ள நபர்கள் வேறு மாவட்டங்களில் இது போன்று போலியாக முகாம்களை நடத்தி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன. அதில் உண்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் விசாரணை விரிவுபடுத்தப்படுத்தவும், திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் இது போன்ற தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை என கருதும் அதே நேரத்தில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வழக்கு: தனியார் பள்ளிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. பள்ளி இயக்குனரகம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details