கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், அதிமுக வேட்பாளர் ஜெய பிரகாஷை விட 1,92,486 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வ.எண் | கட்சி பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
1. | திமுக கூட்டணி, காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் (வெற்றி) | 4,92,883 |
2. | அதிமுக வேட்பாளர் வி.ஜெயபிரகாஷ் | 3,00,397 |
3. | பாஜக வேட்பாளர் சி.நரசிம்மன் | 2,14,125 |
4. | நாதக வேட்பாளர் வித்யா ராணி (வீரப்பனின் மகள்) | 1,07,083 |
- கிருஷ்ணகிரி தொகுதி, திமுக கூட்டணியில் 2019-ல் காங்கிரஸ் போட்டியிட்டு வென்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிட்டிங் எம்பி டாக்டர் செல்லகுமார் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஓசூரில் 2001, 2006, 2011 மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருந்த முன்னாள் எம்எல்ஏ கோபிநாத்திற்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கியது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் ஓசூர், தளி, வேப்பனஹள்ளி ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றதில்லை எனக்கூறப்பட்டது. இதில் அதிமுகவும், ஓசூரைச் சேர்ந்த ஜெயபிரகாசிற்கு வாய்ப்பு வழங்கியதால் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்பி ஆகலாம் என்கிற நிலை உருவானது.
- காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுகவின் 2 மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றினர். தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர் என்பதால் தெலுங்கு மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார். இன்று காலை, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி நடைப்பெற்றது.
- 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று தனிதனியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதல் சுற்று முதல் இறுதி சுற்றுவரை தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த கோபிநாத் 28 சுற்றுகளின் முடிவில் 4,91,081 வாக்குகளும் 1,752 தபால் வாக்குகளும் என மொத்தமாக 4,92,883 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
- அதிமுக 3,00397 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும் வீரப்பனின் மகளுமான வித்யாராணி 1,07,083 வாக்குகளை பெற்றுள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 1,92,486 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை தன் வசமாக்கி உள்ளது. வெற்றியைத் தொடர்ந்து கோபிநாத் தனது மனைவி பிள்ளைகள் திமுக எம்எல்ஏக்கள் பிரகாஷ், மதியழகன் ஆகியோருடன் வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொண்டார்.
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை ஒசூர் எம்.ஏல்.ஏ வாக இருந்த கோபிநாத் களமிறங்கப்பட்டார். அதிமுக சார்பில் ஒசூர் மாநகர மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் போட்டியிட்டார். பாஜக சார்பில் முன்னாள் எம்.பி. நரசிம்மன் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக வீரப்பனின் மூத்தமகள் வித்யாராணி போட்டியிடுகிறார். இவர்களுடன் மொத்தம் 27 பேர் இத்தொகுதியில் போட்டியிட்டனர்.