திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளகவி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னூர் காலனி. இந்த மலைக்கிராமம், கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், சாலை வசதி இல்லாததால் பெரியகுளம் வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆற்று பாதையில் நோயாளியை தூக்கி செல்லும் கிராம மக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால், சின்னூர் காலனிக்குச் செல்லும் வழியில் உள்ள கல்லாறு மற்றும் குப்பாம்பாறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களாக மலைக்கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்தனர்.
இந்தச் சூழலில், சின்னூர் காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மலைக்கிராம இளைஞர்கள் 10 பேர் ஒன்றிணைந்து, டோலி கட்டி 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூக்கிச் சென்றனர்.
பின்னர் சின்னையம்பாளையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மலைக் கிராமத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இதுபோன்று தொடர்ந்து அவதிப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் இன்று உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது. இந்ந்நிலையில், தங்கள் கிரமத்திற்கு செல்லும் சாலை வசதி குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போதுதான் இது போன்ற அசம்பாவிதம் நிகழாமல் இருக்கும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:பாரில் நடனமாடிய கல்லூரி மாணவர் திடீரென உயிரிழப்பு.. நடந்தது என்ன?