தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொச்சி டூ மூணாறு.. வெற்றிகரமாக தரையிறங்கிய கடல் விமானம்! -சுற்றுலாப் பயணிகளுக்கான விமான சேவை எப்போது? - WATER FLIGHT SERVICE TRAIL

கொச்சி - மாட்டுப்பட்டி கடல் விமானம் இன்று காலை 11 மணியளவில் மூணாறில் உள்ள மாட்டுப்பட்டி அணையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்னும் ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவை தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடல் விமானம்
கடல் விமானம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 5:25 PM IST

தேனி :சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காவும் அவர்களின் மகிழ்ச்சிக்காகவும், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை கடல் விமான சேவையை துவக்க இருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று காலை கொச்சியில் இருந்து துவங்கியது.

அதன்படி கொச்சி - மூணாறு மாட்டுப்பட்டி அணை வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. விமானமானது காலை 11 மணி அளவில் மூணாறு மாட்டுப்பட்டி அணையில் தரையிரங்கியது.

சாலையில் பயணம் செய்தால் குறைந்தது 5 மணிநேரம் ஆகும். ஆனால் இந்த விமானம் அரை மணி நேரத்தில் வந்தடைந்தது. மூணாறு மாட்டுப்பட்டி அணைக்கு வந்த விமானத்திற்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சோதனை ஓட்டம் முடிந்து அனைத்தும் சரியாக நடந்தால், இன்னும் ஆறு மாதங்களுக்குள் சுற்றுலா பயணிகளுக்கான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :சிங்கப்பூர் டூ சென்னை.. ரூ.15 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.. 25 பேர் கைது!

மாலத்தீவைப் போல இந்த சேவையை கொச்சி, வயநாடு, ஆலப்புழா மற்றும் பல இடங்களில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. கடல் விமானம் தரையிறங்குவதற்கு இரண்டு மீட்டர் ஆழமும், புறப்படுவதற்கு சுமார் 800 மீட்டர் நீர் ஓடுபாதையும் மட்டுமே தேவையாக உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் கடல் விமான சேவை முன்மொழியப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு இடையேயான தொடர்பை அதிகரிக்க இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமானம் என்பது சிறிய ரக விமானம் ஆகும். தண்ணீரில் மிதக்கும் நீர் குவிமாடங்களில் இருந்து பயணிகள் கடல் விமானத்தில் ஏறுவார்கள். விமானத்தின் அளவைப் பொறுத்து 9, 15, 17, 20 மற்றும் 30 பேர் வரை பயணிக்க முடியும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details