தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேலோ இந்தியா: தமிழகத்திற்கு முதல் தங்கம்! யோகாவில் சாதித்த இரட்டையர்கள்! - தமிழ்நாடு

Khelo India Games: 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் யோகாசனத்தில் தமிழக அணியின் இரட்டையர்கள் தங்கம் வென்று அசத்தினர்.

khelo-india-games-522-participants-in-tamil-nadu
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்தில் 522 பேர் பங்கேற்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 6:09 PM IST

Updated : Jan 21, 2024, 12:08 PM IST

சென்னை:6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியானது முதல்முறையாகத் தமிழ்நாட்டில் நேற்று (ஜன. 19) முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் நம் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500 க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600 க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட 1,000-க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200 க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள்.

இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ல் முதல்முறையாகத் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக (DEMO Sports) இடம் பெறுகின்றன என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து தமிழக அணியாக 522 விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற உள்ளனர். இதில் 266 சிறுவர்கள் மற்றும் 256 சிறுமிகள் கலந்து கொண்டுள்ளனர்.குறிப்பாக, வில்வித்தை(4), தடகள போட்டி (47), பூப்பந்து(6), கூடைப்பந்து(24), குத்துச்சண்டை(20), கால்பந்து(40), ஜிம்னாஸ்டிக்ஸ்(17), ஹாக்கி(36), ஜூடோ(14), கபடி(24), கோ-கோ(30) துப்பாக்கி சூடுதல்(16), நீச்சல்(34), கைப்பந்து (28), பளு தூக்குதல்(27), மல்யுத்தம்(21), டேபிள் டென்னிஸ் (8), டென்னிஸ்(6) சைக்கிள் ஓட்டுதல்(22), ஃபென்சிங்(34), தாங் தா(8), மல்லாகம்ப்(12), கட்கா(10), களரிப்பயட்டு(12), யோகாசனம்(12), ஸ்குவாஷ்(10) போன்ற 26 பிரிவிகளில் 522 கலந்து கொண்டுள்ளனர்.

அதன் தொடர்சியாக இன்று (ஜன. 20) ராஜரத்தினம் மைதானத்தில் யோகனசனப் போட்டியானது நடைபெற்றது. இந்த யோகசனப் போட்டியானது இருவர் கலந்து கொண்டு இசைக்கு ஏற்றது போல் யோகாசனம் செய்ய வேண்டும். அதன்படி இந்த பிரிவில், தமிழகத்தை சேர்ந்த திவேஷ் மற்றும் சர்வேஷ் என இரட்டை சகோதர்கள் பங்கேற்று தமிழகத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

இதன் மூலம் நடப்பு கேலோ இந்தியா விளையாட்டு தொடரில் தமிழகத்திற்கு முதல் தங்கம் கிடைத்து உள்ளது. முறையே இரண்டாவதாக வெள்ளி பதக்கத்தை மேற்கு வங்காமும், மகாராஷ்டிரா வெண்கலமும் வென்றது.

இதையும் படிங்க:பிரதமர் அடிக்கடி தமிழகம் வர காரணம் இதுதான்.. வேல்முருகன் கூறியது என்ன?

Last Updated : Jan 21, 2024, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details