தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் தனியார் மருத்துவக் கல்லூரி பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை! - Kanchipuram practicing Doctor - KANCHIPURAM PRACTICING DOCTOR

Kanchipuram practicing Doctor Suicide Case: காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பு தொடர்பான கோப்புப்படம்
இறப்பு தொடர்பான கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 3:27 PM IST

Updated : Sep 2, 2024, 3:37 PM IST

சென்னை:காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டை பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதேபோல, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பயிற்சி மருத்துவர்களும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் பயிற்சி மருத்துவர், 5ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் நிலையில், அவர் திடீரென நேற்று இரவு மருத்துவமனையின் 5வது மாடியின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதனை, பதட்டதுடன் எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு சில வினாடிகளில் அந்தப் பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதில் படுகாயம் அடைந்த அவருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்த பெண் மருத்துவர் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது காதல் தோல்வி ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார் என்றும் அதற்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இறுதி ஆண்டு படிப்பை பயிற்சி மருத்துவராக தொடர்ந்து வந்ததுள்ளது தெரியவந்துள்ளது.

தற்கொலை எண்ணத்தை கைவிடுக (Credits- ETV Bharat Tamil Nadu)

இவரின் சடலத்தை பொன்னேரி கரை காவல் நிலைய போலீசார் கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பெண் பயிற்சி மருத்துவரின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என அவருடன் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:30 வயதாகியும் திருமணத்திற்கு சம்மதிக்காத மகள்.. விரக்தியில் பெற்றோர் செய்த காரியம்.. பல்லாவரத்தில் சோகம்!

Last Updated : Sep 2, 2024, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details