தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் திருவிழாக்கு வந்து சென்றவர் குவைத் தீ விபத்தில் உயிரிழப்பு.. தூத்துக்குடி அருகே சோகம்! - Kuwait fire accident - KUWAIT FIRE ACCIDENT

Kuwait fire accident: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்நாட்டில் வேலை பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர் உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் முழ்கியுள்ளனர்.

thoothukudi died person image
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 12:13 PM IST

தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவரது மகன் மாரியப்பன் (41). இவர் குவைத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தில் கடந்த 20 வருடமாக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உயிரிழந்தார்.

கடம்பூர் ராஜூ பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

உயிரிழந்த மாரியப்பனுக்கு, அவரது தாய் வீரம்மாள், கற்பகலட்சுமி என்ற மனைவியும், நிர்மலா என்ற மகளும், கதிர்நிலவன் என்ற மகனும் உள்ளனர். மாரியப்பன் இறந்த தகவல் கேட்டு, அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் உறைந்தனர்.

மேலும், அவரது குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “குவைத்தில் உயிரிழந்த மாரியப்பன் உடலை மீட்டு விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில், மாரியப்பனை மட்டும் நம்பி இருந்த அவரது குடும்பம் மன வேதனையில் உள்ளனர். அந்த குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அதிகளவு நிவாரணத்தொகை வழங்குவது மட்டுமின்றி, அவரது குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு குழந்தைகள் கல்விக்கான உதவிகளை செய்ய வேண்டும்” என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வானரமூட்டி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு மாரியப்பன் வந்துவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தனியார் திருமண மண்டபம் மீதான விதிமீறல் வழக்கு: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - chennai high court madurai bench

ABOUT THE AUTHOR

...view details