தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலகாபாத் டூ சென்னை - ஐகோர்ட் நீதிபதியாக ஷமீம் அகமது பதவியேற்பு! - Justice Shamim Ahmed - JUSTICE SHAMIM AHMED

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஷமீம் அகமது, இன்று (செப்.30) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

ஐகோர்ட் நீதிபதியாக ஷமீம் அகமது பதவியேற்ற புகைப்படம்
ஐகோர்ட் நீதிபதியாக ஷமீம் அகமது பதவியேற்ற புகைப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 3:17 PM IST

சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த ஷமீம் அகமதுவை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.

அந்த வகையில் இன்று அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தற்போதும் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில், 8 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன.

யார் இந்த ஷமீம் அகமது?: நீதிபதி ஷமீம் அகமது அலகாபாத்தில் 1966 ஆம் ஆண்டு பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து 1993 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் துவங்கிய அவர், 2019 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2021 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவரை வரவேற்று, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் பேசினர். இறுதியில் புதிய நீதிபதி ஷமீம் அகமது ஏற்புரையாற்றினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details