சென்னை:தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று (மார்ச் 18) திடீரென தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
மேலும், தமிழிசை செளந்தரராஜன் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தென்சென்னை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய தொகுதியில் ஏதேனும் ஒன்றில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.