தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசியல்வியாதி உள்ள அரசியல் வியாபாரிடம் நான் விவாதிக்கமாட்டேன்' - அண்ணாமலையை விமர்சித்த ஜெயக்குமார்! - Jayakumar criticized talk annamalai - JAYAKUMAR CRITICIZED TALK ANNAMALAI

AIADMK EX Minister D Jayakumar: ஜெயலலிதா மதவாதி என அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசியல்வாதியோடு வாதிடலாம்; ஆனால், அரசியல் வியாதி உள்ள அரசியல் வியாபாரிடம் விவாதிக்கத் தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஜெயக்குமார் மற்றும் அண்ணாமலை புகைப்படம்
ஜெயக்குமார் மற்றும் அண்ணாமலை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 10:38 AM IST

சென்னை: திருச்சியிலிருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக தலைவரான அண்ணாமலை எதற்கும் லாயக்கில்லாதவர், மெச்சூரிட்டி இல்லாதவர், பக்குவப்படாத அரசியல்வாதி அண்ணாமலை தான். ஒருவன் சூடாக வைத்த பாலை குடித்தவுடன் நாக்கு சுட்டுவிடுமாம்; அதன்பின் மோரை பார்த்தால்கூட ஊதி ஊதி தான் குடிப்பானாம், அது அண்ணாமலை தான்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஜெயலலிதா ஆட்சியில் மத நல்லிணக்கம்: அண்ணாமலையை எவ்வளவு தான் திருப்பி அடித்தாலும் வாங்கிக் கொள்கிறார். அண்ணாமலையின் கருத்து தமிழ்நாடு மக்கள் அல்லாமல், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் மத நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய அளவிற்கு, நல்ல சூழ்நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி காட்டியவர், ஜெயலலிதா.

பாஜகவில் தலைவர்கள் இல்லையா? பாஜகவை வளர்க்கக் கஷ்டப்பட்டவர் அத்வானி வாஜ்பாய் அவர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார், அண்ணாமலை. திமுகவின் B Team ஆக செயல்படுகிறார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது. சட்டம் ஒழுங்கை பற்றி அண்ணாமலை வாய் திறக்கிறாரா? நதிநீர் பிரச்சனை பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பை வாங்கி கொடுத்தும், அதைச் செயல்படுத்த வக்கில்லாமல் திமுக உள்ளது. அதை கண்டிக்க அண்ணாமலைக்கு திராணி இல்லை.

அண்ணாமலை ஒரு அரசியல் வியாதி:ஜெயலலிதாவை ஒரு மதத்துக்குள் அடக்கும் வகையில் ஒரு இழிவான செயலை செய்து வருகின்றனர். அண்ணாமலை அரசியல்வாதி அல்ல; அரசியல் வியாதி மற்றும் அரசியல் வியாபாரி. மேலும், ஒரு ஆளுநராக இருந்த தமிழிசை தவறான தகவலை கூறலாமா?,கரசேவைக்கு(Kar seva) ஆட்களை அனுப்பினார் என்று கூறுகிறார். ஜெயலலிதா அதை பேசினார்கள் என்று கூறுவது, பொறுப்பற்ற முறையில் பேசுவது முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. எடுத்துக்காட்டுங்கள் கரசேவைக்கு ஆள் அனுப்ப ஜெயலலிதா சொன்னார்கள் என்றால், அரசியல் விட்டு நான் விளக்கத் தயாராக இருக்கிறேன் என சவால் விடுத்தார்.

ராமர் கோயிலும் கட்ட வேண்டும்; மசூதியும் இருக்க வேண்டும்.அதைத்தான் ஜெயலலிதா விரும்பினார்கள். தோல்வியின் உச்சக்கட்டத்தை நோக்கி பாஜக சென்று கொண்டிருக்கிறது. மேல் இருப்பவர்களும் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள், கீழ் இருப்பவர்களும் அப்படிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாமலையின் மௌனம் ஏன்?:கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல், கஞ்சா உள்ளிட்ட போதை புழக்கம் அதிகமாக இருப்பதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதையெல்லாம் பற்றி அண்ணாமலை என்றைக்காவது பேசியிருக்கிறாரா? அதிமுகவைப் பற்றி பேச வேண்டும், அதிமுகவிடம் வாங்கி கட்ட வேண்டும் என்று மட்டுமே அண்ணாமலை பேசி வருகிறார்.

ஜெயலலிதா தெய்வப்பக்தியுடையவர்: தெய்வப்பற்று இருப்பதால் நீங்கள் எல்லோரும் மதவாதிகளா? அதுபோலவே தெய்வப்பக்தி ஜெயலலிதாவுக்கும் இருந்தது. ஆனால், அது மத பிரிவினை கிடையாது. இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாத ஒரு அரைவேக்காடு தான் அண்ணாமலை. அண்ணாமலை எந்த காரிலில் வந்தார். இன்று என்ற காரில் போகிறார். உழைத்து சம்பாதித்ததா? இல்லை அனைத்தும் ஊழல் உருவமாக உள்ளது.

அரசியல் வியாபாரியோடு விவாதிக்கத் தயார் இல்லை: பாஜக மக்களை ஏமாற்றியுள்ளது. ஒரு அரசியல் வியாபாரி அரைவேக்காடு இவர்களோடு நாங்கள் சென்று விவாதம் செய்ய வேண்டுமா? அரசியல்வாதியோடு விவாதிக்கலாம்; ஆனால், அரசியல் வியாபாரியோடு விவாதிக்கத் தயாராக இல்லை என்றார்.

இஸ்லாமியர்களுக்கு நல்லது செய்தது, அதிமுக:மேலும், டெல்லியில் யார் ஜெயிப்பார் என்று கேள்விக்கு, எனக்கு ஜோசியம் தெரியாது என பதில் அளித்தார். பாஜக தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தது? திமுக சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தது? அதிமுக சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தது? என்று ஒப்பிட்டு உங்களுக்கு கொடுக்கிறேன், அதைப் பாருங்கள். இஸ்லாமியர்களுக்கு திட்டங்களைக் கொண்டு வந்தது அதிமுக தான். இஸ்லாமியர்களுக்கு அமைதியை கொடுத்தது, அதிமுக. பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் ஒரு இஸ்லாமியர்களுக்காவது இங்கு பாதிப்பு இருந்ததா? தமிழ்நாடு அமைதி பூங்காவாகத் திகழ்ந்தது.

அவருக்கு வேறு வழி இல்லை எங்க தலைவர்களைப் பற்றி பேசி வாங்கிக் கட்டிக்கொள்கிறார்கள். எப்படி பேசினாலும் ஓட்டு விழாது. நியாயவிலைக் கடையில் பாமாயில் கிடையாது. சர்க்கரை, அரிசி என எந்த பொருட்களும் இல்லை. அடுத்த மாசம் வாங்க எனக் கூறுகிறார்கள். அடுத்த மாதம் வரை வயிற்றில் துணியைக் கட்டியிருப்பார்களா எனக் கேள்வி எழுப்பினார்கள். மேலும், எது எப்படி நடந்தாலும் 2026-ல் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சி அமைப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “திராவிட இயக்கக் கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளது" - ஆர்.என்.ரவி பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details