ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள மிக பழமையான குளத்தை புதுப்பிக்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அந்த நடவடிக்கையின் காரணமாக, குளம் தூர்வாரப்பட்டு, 5 மீட்டர் ஆழத்திற்கு ஆழப்படுத்தப்பட்டு, மழைக்காலத்தில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளத்தைச் சுற்றி பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக, சிறிய அளவில் விளையாட்டுத்திடலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல வசதிகள் கொண்டு புனரமைக்கப்பட்டுள்ள இந்த குளத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் இறுதியில் திறந்து வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வாலாஜாபேட்டை பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது, "கடந்த 1890ம் ஆண்டு ஆற்காடு நவாப் என்பவரால் அதிக மழைநீரை தேக்கவும், பாசனத்திற்காகவும் இந்த குளம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு, குடியிருப்பாளர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டது. இக்குளம் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.1.31 கோடி செலவில் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது 5 மீட்டர் ஆழத்திற்கு மண் அகற்றப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :தூத்துக்குடி துறைமுகத்தை அடைந்த இந்திய ஆளில்லா ரோந்து கப்பல்! வரவேற்ற அதிகாரிகள்..