தூத்துக்குடி:வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும்போது ஆங்கிலம் உதவும். இந்தி தேவைப்பட்டால் படித்துக்கொள்ளுங்கள், படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. அது விருப்ப பாடம் மட்டுமே என்று இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் சு.முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் சு.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
விழாவில், இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் சு.முருகன் பேசுகையில், “ இஸ்ரோ 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அணுசக்தி துறையின் அங்கமாக இருந்த இஸ்ரோ 1969 ஆம் ஆண்டு தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நாடு ரஷ்யா. நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா.
இதையும் படிங்க:ரூ.10,000 கோடி கொடுத்தாலும்...தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! |
அரசு பள்ளியில் தான் நான் பயின்றேன். பள்ளியில் நான் முதல் மாணவன். ஆனால், தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் கடைசி இடம் தான் எனக்கு கிடைத்தது. எனினும், பாலிடெக்னிக் முடிக்கும் போது முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். இன்று அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. மேற்படிப்பு படிக்கும்போது, மாணவர்கள் பேசுகின்ற ஆங்கிலம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற பிரச்னைகளை சந்திக்கும் நிலை எனக்கு ஏற்பட்டது.