தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை ஈஷா யோகா பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி மரணம்.. பள்ளி நிர்வாகம் விளக்கம் என்ன? - Isha school student death - ISHA SCHOOL STUDENT DEATH

Isha school student death: கோவையில் ஈஷா யோகா மையத்திற்கு சொந்தமான பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மோக்ஷக்னா என்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 4:33 PM IST

கோயம்புத்தூர்: சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று (ஜூன் 21) ஈஷா பள்ளி மாணவர்கள் சிலர் அவினாசி சாலை பீளமேடு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு யோகா செய்ய சென்றுள்ளனர். யோகா நிகழ்ச்சி முடிந்த பிறகு சவுரிபாளையம் பகுதியில் ஈஷா யோகா மையம் சார்பில் வாடகைக்கு அறை எடுத்து ஓய்வு எடுக்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு சென்ற மாணவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் 12ஆம் வகுப்பு மாணவர் மோக்ஷக்னா என்பவர் தண்ணீர் குழாயை திறந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற பீளமேடு போலீசார் மாணவர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சிங்காநல்லூர் ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் உயிரிழந்தது தொடர்பாக ஆந்திராவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் கோயம்புத்தூர் விரைந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் அளித்துள்ள விளக்கம்:"எங்கள் பள்ளி மாணவர்கள் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் நகருக்கு சென்றார்கள். அப்போது அங்கு நடந்த விபத்தில் எங்கள் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் மோக்ஷக்னா எதிர்பாராதவிதமாக உயிரிழந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மோக்ஷக்னா எதிர்பாராதவிதமாக மின்னதிர்ச்சிக்கு உள்ளானார், அவரை உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கடினமான நேரத்தில் நாங்கள், எங்களின் பள்ளி மாணவர்களுக்கு ஆதரவையும், ஆறுதலையும் வழங்கி வருகிறோம். ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். அவர்களோடு உறுதுணையாக இருப்பதோடு எங்களின் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது மற்றும் விசாரணையும் நடைப்பெற்று வருகிறது" இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவை அருகே சாலையில் நடந்துச் சென்ற முதியவரை தாக்கிய யானை.. பதைபதைக்கும் காட்சி! - Elephant attack on old man

ABOUT THE AUTHOR

...view details