மதுரை: கோடை கால விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க மத்தியப் பிரதேச மாநில முக்கிய நகரமான ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஜபல்பூர், மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (02122) ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் 18, 25, மே 02, 09, 16, 23, 30, ஜூன் 06, 13, 20, 27, ஜூலை 04, 11, 18, 25 ஆகிய வியாழக்கிழமைகளில் மாலை 04.25 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் மதுரை, ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (02121) மதுரையில் இருந்து ஏப்ரல் 20, 27, மே 04, 11, 18, 25, ஜுன் 01, 08, 15, 22, 29, ஜுலை 06, 13, 20, 27 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 07.40 மணிக்கு ஜபல்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் நயின்பூர், பாலாகாட், கோன்டியா, நக்பிர், பலார்ஷா, விஜயவாடா, கூடூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.