சென்னை:வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக (Cyclone Fengal) மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் சுமார் 10 கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தென்மேற்கு வங்கக் கடலில் தென்மேற்கு வங்கக் கடலில் தென்கிழக்கே திருச்சிக்கு 240 கிமீ தொலைவில் அதாவது புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 640 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 720 கிமீ தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. இது தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களில் இலங்கைக் கடற்கரையைத் தாக்கும் என்றும் அதனால் மோசமான வானிலை சூழல் நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க:ஃபெங்கல் புயல் எதிரொலி: ஆக்ரோஷமாக மாறிய வங்கக்கடல்!