தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னதாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்! - Southwest Monsoon

Southwest Monsoon: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை புகைப்படம்
மழை புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 3:18 PM IST

சென்னை:அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில், நடப்பாண்டில் சில நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் இன்றிலிருந்து 21ஆம் தேதி வரை சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் இடி மின்டலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஆம் ஆத்மி போராட்டம் எதிரொலி: டெல்லியில் 144 தடை உத்தரவு - 144 Imposed In Delhi

ABOUT THE AUTHOR

...view details