தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 4:00 PM IST

ETV Bharat / state

"5-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள்” - விழுப்புரத்தில் சுயேட்சை வேட்பு மனுத் தாக்கல் செய்த நபர் கூறுவது என்ன? - Viluppuram Independent Candidate

Viluppuram Independent candidate: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முறை களம் கண்ட வேட்பாளர் அரசன், இம்முறையும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

விழுப்புரம்:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் வரும் 27ம் தேதி வரை பெறப்படுகிறது. அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாத நிலையில், அரசன் என்ற முதியவர் சுயேட்சை வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியைச் சேர்ந்த முதியவர் அரசன், நாடாளுமன்ற தொகுதிக்கு சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். நான்காவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறும் அரசன், நான்கு முறை சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.

மேலும், நான்கு முறை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் போட்டியிட்டு உள்ளார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதை லட்சியமாகக் கொண்டு உள்ளதாக அரசன் தெரிவித்துள்ளார். கல்வியறிவு தனக்கு முற்றிலும் இல்லை என்று கூறும் அவர், தான் நீண்ட நாட்களாக விவசாயக் கூலியாக வேலை செய்து வந்ததாகவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடைந்து என் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்கிறார்.

மேலும், “தேர்தலில் வெற்றி பெற்றால், ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை இலவச சைக்கிள், ஐந்தாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை மோட்டார் சைக்கிளும் வழங்குவேன். விவசாயக் கூலிகள், முதியோர், காவலர்கள் என அனைவருக்கும் தற்போது இருக்கும் ஊதியம், ஓய்வூதியத் தொகையை விட பத்து ரூபாய் அதிகமாக வழங்குவேன்.

நான் வெற்றி பெற்றால், யார் பிரதமராக அமைந்தாலும், அவரிடம் காலில் வணங்கி இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” என்கிறார். கடந்த முறை பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அரசன், 16 ஆயிரம் வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பலாப்பழம், ஆப்பிள், மின்விசிறி ஆகிய சின்னங்களை கேட்டுள்ளதாகவும் அரசன் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க:வங்கதேச ராணுவத்தால் தமிழ்நாடு காவலர் கைது.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details