கோயம்புத்தூர்:கோவையில் உள்ள பிரபல தொழிலதிபர்கள் வரதராஜன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த செவ்வாய்கிழமை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வரதராஜனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், அஸ்வின் பேப்பர் மில் உரிமையாளர் பாலசுப்பிரமணியமிற்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக சோதனை தொடர்ந்து வருகின்றது.
பாலசுப்பிரமணியம் ஈரோடு மாவட்டம் பவானியில் நடத்தி வரும் அஸ்வின் பேப்பர் மில்லிலும், கோவை சிவானந்தா காலனியில் உள்ள பேப்பர் மில் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக பிரமுகர் இளங்கோவனுக்கு சொந்தமான எம்ஐடி கல்லூரிகளில் சோதனை ஆனது நடத்தப்பட்டது. அங்கு 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:"தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா?” - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!