தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக்கில் பட்டாசு எடுத்துச் சென்றபோது விபரீதம்! அருகில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி பட்டு பட்டாசு வெடித்ததில் இளைஞர் பலி - ULUNDURPET FIRECRACKERS ACCIDENT

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தீபாவளிக்காக பட்டாசுகளுடன் இருச்சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தீடீர் தீ விபத்துக்குள்ளான நிலையில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த டேவிட்சன், பட்டாசு தொடர்பான கோப்புப் படம்
உயிரிழந்த டேவிட்சன், பட்டாசு தொடர்பான கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 2:29 PM IST

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் பகுதியைச் சேர்ந்த டேவிட் வில்சன் மற்றும் ஆண்டனி பிரேம்குமார், பவுல்ராஜ் ஆகிய மூவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது வழியில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது அதில் வெளியான தீப்பொறி இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளின் மீதும் விழுந்து வெடித்தது. இதில் டேவிட் வில்சன், ஆன்டனி பிரேம்குமார், பவுல்ராஜ் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் உடனடியாக மூன்று பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இதில் டேவிட்சன் (22) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தீபாவளி பட்டாசை உங்க குழந்தைங்க பாதுகாப்பா வெடிப்பது எப்படி? சுகாதாரத் துறை அறிவுறுத்தல்கள் இதோ

இதேபோல் ஆந்திராவில் உள்ள எலுரு பகுதியில் சுதாகர் என்பவர் அவரது ஸ்கூட்டியில் அதிகளவிலான பட்டாசுகளை ஏற்றிச் சென்றபோது வழியில் திடீரென தீபற்றிய பட்டாசுகளால் சுதாகர் உயிரிழந்த நிலையில் மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details