வேலூர்:வேலூர் மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து சேலம் மண்டல முதுநிலை மேலாளர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மேலாளர், கிருஷ்ணகிரி மாவட்ட உதவி மேலாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி மற்றும் அணைக்கட்டு வட்டங்களில் செயல்படும் அரசு மதுபான கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 11335 பணியாற்றி வரும் மேற்பார்வையாளர் ஜெகநாத மூர்த்தி மற்றும் விற்பனையாளர் ராஜேஷ் ஆகியோர் 10 ரூபாய் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெகநாத மூர்த்தி மற்றும் விற்பனையாளர் ராஜேஷ் ஆகியோரை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.