சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதோடு, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கையாக ரெட் அலார்ட் விடுத்தது.
மழையினால் விமனத்தை ரத்து செய்யும் பயணிகள்:இதனால் விமான பயணிகள் பலர் பாதுகாப்புக் கருதி, சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் தங்கள் பயண விமானகளில் ரத்து செய்துள்ளனர். இதனால் கடந்த 3 தினங்களாக ஒரு சில விமானங்கள் பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் இன்றி விமானங்கள் ரத்து: இந்நிலையில் நேற்று இரவு ரெட் அலர்ட் மற்றும் கனமழை எச்சரிக்கையும் திரும்ப பெறப்பட்டது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில், இன்று வழக்கம் போல் விமான சேவைகள் இயங்கத் தொடங்கி விட்டன. ஆனாலும் பயணிகள் பலர் இன்னும் அச்சம் நீங்கி விமான பயணம் மேற்கொள்ள விமான நிலையம் வராததால், இன்று வியாழக்கிழமையும் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 4 விமானங்களும், வருகை தரும் 4 விமானங்களும் என 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவர்கள்.. காரணம் என்ன?
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்:
- அதிகாலை 4.40 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.
- அதைப்போல் காலை 5.50 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.
- காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.
- மாலை 2.15 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்த குறைந்த அளவு பயணிகள், அதற்குப் பின்பு அந்தந்த நகரங்களுக்கு செல்லும் வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதைப்போல்,
- காலை 9.10 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்.
- காலை 9.30 மணிக்கு அந்தமானில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்.
- காலை 9.10 மணிக்கு பகல் 12.10 மணிக்கு, திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்.
- நன்பகல் 1:25 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்
ஆகிய 4 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “கனமழை எச்சரிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம், 17ஆம் தேதி இன்று வியாழக்கிழமை வரை, ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால் பயணிகள் பலர் தங்களுடைய பயணத் திட்டத்தை, இன்று வரையில் ரத்து செய்துவிட்டனர். நாளை வெள்ளிக்கிழமை முதல், சென்னை விமான நிலையத்தில், வழக்கமான பயணிகளுடன், வழக்கமான விமான சேவைகள் இயங்கும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்