தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டானா புயல்; தமிழகத்தில் 9 துறைமுகங்களுக்கு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! - DANA CYCLONE

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், 25ஆம் தேதி புயலாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 11:18 AM IST

Updated : Oct 22, 2024, 12:09 PM IST

சென்னை:அந்தமானையொட்டிய வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பற்று, நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இப்புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரை செய்த 'டானா' (Dana Cyclone) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நேற்று மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை எப்போது வலுப்பெறும்? - வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் கணிப்பு!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவின் பாரதீப்க்கு தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு தெற்கு தென்கிழக்கு 770 கிலோ மீட்டர் தொலைவிலும், வங்கதேசத்தின் கேபுபுராவிற்கு தெற்கு தென்கிழக்கு 740 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து நாளை டானா புயலாக மத்திய கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெறும் எனவும், மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வடமேற்கு வங்கக் கடலில் பகுதியில் வரும் 24ஆம் தேதி காலை வலுப்பெறும் டானா புயல், வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையே வரும் 24ஆம் தேதி இரவு மற்றும் 25ஆம் தேதி காலையில் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்" என்றும் தெரிவித்துள்ளது.

9 துறைமுகங்களுக்கு புயல் எச்சரிக்கை:காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மத்திய வங்க கடல் பகுதியில் டானா புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களுக்கு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 22, 2024, 12:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details