தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்பு அறிமுகம்! - IIT Madras - IIT MADRAS

சென்னை ஐஐடியில் பள்ளி மாணவர்களுக்காக உயர்கல்வி மற்றும் தொழில்நெறி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ஐஐடிஎம் பள்ளி இணைப்புத் திட்ட த்தை அறிமுகப்படுத்தியுள்ளது

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 3:50 PM IST

சென்னை:சென்னை ஐஐடி பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் நெறி குறித்த தகவல்களை
அறிந்து கொள்ளும் வகையில் ஐஐடிஎம் பள்ளி இணைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தரவு அறிவியல் செயற்கைத் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரு சான்றிதழ் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

பள்ளி மாணவர்களுக்கென சென்னை ஐஐடி பேராசிரியர்களைக் கொண்டு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும் இப்படிப்புகளின் மூலம் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

இதற்கான வகுப்புகள் அக்டோபர் 21 ந் தேதி தொடங்க உள்ளதது. இதற்காக https://school-connect.study.iitm.ac.in/ என்ற இணைப்பில் செப்டம்பர் 16 ந் தேதி முதல் அக்டோபர் 4 ந் வரையில் பதிவு செய்து கொள்ளாம் எனவும் ஐஐடியிடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் செப்டம்பர் 30 ந் தேதி வரையில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11,000 மாணவர்கள்:இது குறித்து சென்னை ஐஐடி அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் (Centre for Outreach and
Digital Education – CODE) தலைமைப் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில்,"தற்போது தரவு அறிவியல்-செயற்கை நுண்ணறிவு மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டு முக்கிய படிப்புகளை வழங்குகிறோம். அடுத்து வரவிருக்கும் மாதங்களில் மேலும் பரந்த அளவிலான நலன்களை நிறைவேற்றும் வகையில் இதுபோன்ற மேலும் பல படிப்புகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இப்படிப்பிற்கான கால அளவு 8 வாரங்களாகும். இந்த முன்முயற்சிக்குப் பள்ளிகள் தரப்பில்
இருந்து கணிசமான அளவு வரவேற்புக் கிடைத்துள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள்
சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்பட முன்வந்திருக்கின்றன.

முதல் தொகுப்பில் நாடு முழுவதும் இருந்து ஏறத்தாழ 11,000 மாணவர்கள் தங்களைப் பதிவு செய்து
கொண்டிருக்கின்றனர். தங்களை இணைத்துக் கொண்டுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இந்த சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்ளலாம்" என தெரிவித்தார்.

ரோபோக்களை உருவாக்கும் பள்ளி மாணவர்கள்:இதனையடுத்து பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறும்போது," ரிமோட் மூலம் இயக்கப்படும் ரோபோக்களை பள்ளி மாணவர்களே யார் உதவியுமின்றி உருவாக்குவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. தரவு அறிவியல் படிப்பைத் தொடரும் மாணவர்கள் ஆழமான நுண்ணறிவைப் பெறுவதற்காக தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தும் செயல்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற படிப்புகள் மாணவர்களை பல்வேறு துறைகளுக்குத் தயார்ப்படுத்துவதுடன், குழந்தைகளின் ஆர்வத்தையும், அவர்களின் வலிமையையும் அடையாளம் காண உதவுகின்றன. பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

நாடு தழுவிய அளவில் பள்ளிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம். இயல்பாகவே குழந்தைகள் எதிலும் ஆர்வமுடையவர்கள். பலதரப்பட்ட கேள்விகளுடன் அவர்களுடன் கலந்துரையாடுவதே எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். மாணவர்களின் ஆர்வத்தை வளர்த்தெடுப்பது, அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கவும், நிறைவுசெய்யவும் மிகவும்
அவசியமாகும்" எனத் தெரிவித்தார்.

சான்றிதழ் படிப்பு பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • பதிவு செய்யப்பட்ட விரிவுரை வீடியோக்கள்
  • செயல்முறையுடன் கூடிய பயிற்சி
  • நேரடிக் கலந்தாலோசனைகள்
  • பயிற்சிப் பணிகள் (assingments)
  • சான்றிதழ் வழங்க கணினி அடிப்படையிலான மதிப்பீடு

சென்னை ஐஐடி இன்னும் ஏராளமான குறுகியகாலப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இப்படிப்புகள் மாணவர்களுக்கு வெவ்வேறு தொழில்நெறிப் பாதைகளை ஆராய்ந்தறிந்து தங்களது எதிர்காலப் படிப்புகள் குறித்த நடைமுறை அனுபவத்தைப் பெறும் வகையில் தனித்துவமான வாய்ப்பை வழங்கும் என ஐஐடி பேராசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details